/உள்ளூர் செய்திகள்/அரியலூர்/தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சலிங் துவக்கம்தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சலிங் துவக்கம்
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சலிங் துவக்கம்
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சலிங் துவக்கம்
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சலிங் துவக்கம்
ADDED : மே 23, 2010 02:45 AM
அரியலூர்: பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட தொடக்க பள்ளி ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங் அரியலூரில் நேற்று முன்தினம் துவங்கி நடக்கிறது.
தமிழ்நாடு தொடக்க கல்வித்துறையின் கீழ் செயல்படும் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களுக்கான பஞ்.,யூனியன் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, 2010ம் ஆண்டுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு வழங்குவதற்கான கவுன்சிலிங், அரியலூர் சி.எஸ்.ஐ., மேல்நிலை பள்ளியில் நேற்று முன்தினம் துவங்கியது.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சுப்ரமணியன் தலைமையில் முதல் இரண்டு நாட்கள் நடந்த, தலைமை ஆசிரியர்கள் இடமாறுதல், பதவி உயர்வு வழங்குதல், தரம் உயர்த்தப்பட்ட நடுநிலை பள்ளிகளில், 6,7,8 வகுப்புகளில் பணிபுரிந்து உயர்நிலை பள்ளிக்கு ஈர்த்து கொள்ளப்படாத பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாறுதல் வழங்குதல் உள்ளிட்ட திட்டங்களின்கீழ், 250 பேருக்கு கவுன்சிலிங் மூலம் இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. இக்கவுன்சிலிங் நிகழ்ச்சியில் அலுவலக சூப்பிரண்டு ராசையா, உதவி தொடக்க கல்வி அலுவலர் குமணன், கிளர்க் பழனியப்பன், மனோகரன் மற்றும் பல்வேறு பள்ளிகளின் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.